முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகள் தடை

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகளை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை பரீட்சை மோசடிகளில் ஐவர் ஈடுபட்டுள்ளனர்.

பரீட்சையின் போது முறைகேடுகள் இடம்பெற்ற 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை செய்வதற்கு சிறப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறு குற்றங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!