முல்லைத்தீவில் மூதாட்டியின் துணிகர செயல் மகிழ்ச்சியில் மகன்

முல்லைத்தீவு – செல்வபுரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரின் துணிகரமான செயல் அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகின்றது.

குறித்த மூதாட்டி அவரது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மகள் ஆசிரியர் தொழில் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் மூதாட்டி தனது மகனை பார்க்க செல்வதற்கு மகள் அனுமதி கொடுப்பதில்லை என தெரியவருகின்றது.

இதனால் மகள் பாடசாலை சென்ற சந்தர்ப்பத்தில் மூதாட்டி மகளுடைய வீட்டை விட்டு வெளியேறி நடக்க முடியாத நிலையில் வீதியில் இருந்து சிரமப்பட்டுள்ளார்.

இதன்போது வீதியால் சென்றவர்களிடம் தனது மகனின் வீட்டிற்கு செல்வதற்கு உதவிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அப்பகுதியில் சென்ற ஒருவர் குறித்த மூதாட்டியின் மகனை அழைத்துவந்து மூதாட்டியை மகனிடம் ஒப்படைப்பதற்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!