முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் சேத விபரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் 10,118 குடும்பங்களை சேர்ந்த 32,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 86 வீடுகள் முழுமையாகவும் 2,297 வீடுகள் பகுதி அளவிலும் சேதமாகியுள்ளதாக அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த சேத விபரங்கள் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) முழுமையான விபரங்களை ரூபவதி கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். அவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“வெள்ளத்தினால் 24,493.5 ஏக்கர் பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளன. அதில் 20,146.5 ஏக்கர் நெற்பயிர் செய்கை காணிகள் பகுதியாகவும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 3,849 ஏக்கர் நிலக்கடலை செய்கையும் 498 ஏக்கர் மரக்கறிச்செய்கையும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை 3,012 மாடுகள், 418 எருமை மாடுகள், 912 ஆடுகள், 6,895 கோழிகள் என கால்நடைகளும் இறந்துள்ளன.

மேலும், கடற்தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்ற 15 படகுகள், 187 வலைகள் காணாமல் போயுள்ளன. நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களின் 7 படகுககளும், 37 வலைகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளன” என ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!