முல்லையில் ஊடகவியலாளருக்கு பொலிஸ், ராணுவம் அச்சுறுத்தல்

முல்லைத்தீவு- தண்ணீருற்று பகுதியில் இராணுவத்தினா் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான குடிநீர் குழாய் கிணற்றிலிருந்து தினசரி பல லட்சம் லீற்றர் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில்,

அது தொடர்பாக செய்தி சேகாிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து கடுமையாக அச்சுறுத்தியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தண்ணீரூற்று பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான குடிநீர் குழாய் கிணற்றிலிருந்து,

தினசரி பல லட்சம் லீற்றர் தண்ணீரை இராணுவத்தினர் பவுசர்களில் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இன்று மதியம் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர்

செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் ஊடகவியலாளர்களை தடுத்த இராணுவத்தினர் ஊடகவியலாளர்களின் கமராவை பறிக்க முயற்சித்ததுடன், பொலிஸாரையும் அந்த இடத்திற்கு அழைத்து,

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி கமராவை பறிக்க முயற்சித்தனர் எனினும் ஊடகவியலாளர்கள் திடமாக நின்றதுடன் எக்காரணம் கொண்டும் கமராவை கொடுக்க முடியாது என மறுத்தனர்.

இதனையடுத்து பொலிஸார் இராணுவத்தை நியாயப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளனர்.

Sharing is caring!