மு.கா ஆதரவின்றி ஜனாதிபதியாக முடியாது

அடுத்த ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இன்றி எந்த ஒரு வேட்பாளராலும் வெற்றி பெற முடியாது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் 28 ஆவது பேராளர் மாநாடு இன்று நடைபெற்றது.

பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய மாநாட்டின்போது 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.

Sharing is caring!