மூன்றாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நாலக சில்வா

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இன்று (22) மூன்றாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கொலை சதித் திட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவே இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19 ஆம் திகதி இவரிடம் இரண்டாவது முறையாக சுமார் 9 மணிநேரம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.

நாலக்க சில்வாவிடம் கடந்த (18) திகதி முதற்தடவையாக சுமார் 9 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் இன்று கைது செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் அரசியல் மட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!