மெய்சிலிர்க்க வைத்த வானவில்

இலங்கையின் மேற்கே கொழும்பில் நேற்றைய தினம் வானவில் தோன்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

நேற்று மாலை கீழ்வானில் தோன்றிய இரண்டு வானவில் கொழும்பில் இருந்த மக்கள் அனைவரையும் வெளியே வந்து பார்த்து ரசிக்க வைத்துள்ளது.

மேற்படி வானவில் அழகில் மெய்மறந்த பலர் வீதிகளிலும் உயரமான கட்டடங்களிலும் ஏறி ஆர்வத்தோடு விதவிதமான புகைப்படங்களைப் பிடித்துள்ளனர்.

இலங்கையர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரபட்ட வானவில்லின் புகைப்படம் வெளிநாட்டவர்களையும் கவர்ந்திருந்தமை காணக்கூடியதாக உள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த வேற்றின மக்கள் சிலர் இலங்கையின் பிரமிக்க வைக்கும் அழகு என தமது முக நூல்களிலும் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Sharing is caring!