மெலிபன் வீதியிலுள்ள கட்டடத்தில் தீ விபத்து

கொழும்பு – மெலிபன் வீதியிலுள்ள மூன்று மாடி கட்டடம் ஒன்றில் இன்று (06) காலை தீ பரவியுள்ளது.

தீயினால் குறித்த கட்டடத்தின் முதலாம் மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்று தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி, 13 தீயணைப்பு வீரர்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதேவேளை, புத்தளம் – மதுரங்குளி, கிவுலத்தருன பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

இதனால், வர்த்தக நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தீக்கிரையாகி உள்ளன.

முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஆகியன இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!