மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது : மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்க அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. அவர்களின் வெளிவிவகாரக் கொள்கைகள் சற்று கூடியதாக, குறைந்ததாக அல்லது சமமானதாகவே உள்ளது.” என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அண்மையில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடனான சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “ நாங்கள் சந்தித்துக் கொண்டோம். தூதுவர் ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறும் போது, மரியாதை நிமித்தமாக, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்திப்பது வழக்கம். இது ஒரு வழக்கமாக சந்திப்பு மட்டுமே.” என்று கூறியுள்ளார்.

Sharing is caring!