மைத்திரிபால நேபாளத்திற்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (29) நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

வங்காள விரிகுடாவை அண்டிய நாடுகளின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் 4 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

நேபாளம் காத்மண்டுவில் நடைபெறவுள்ள இந்த மாநாடு வங்காள விரிகுடாவை சமாதானமான, பேண்தகு வலயமாக உருவாக்குதல் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

நேபாள விஜயத்தின்போது ஜனாதிபதி, நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டார் (Bidhya Devi Bhandar) மற்றும் பிரதமர் கே.பி. ஒலி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி லும்பினி நகருக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

Sharing is caring!