மொரட்டுவ, கொரள்ளவெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதல் செய்யப்பட்டு கொலை

மொரட்டுவ, கொரள்ளவெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.76 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

கொலை தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Sharing is caring!