மோட்டார் சைக்கிள்களிலும், நடந்தும் அவர்கள் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப் படையினர்

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த ஆவா குழுவின் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் (எஸ்.ரி.எவ்.) பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. கொக்குவில் பகுதியிலேயே அதிகளவு வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையும் வீடொன்றின் மீது தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.

நேற்றிலிருந்து கொக்குவில் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்களிலும், நடந்தும் அவர்கள் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

Sharing is caring!