மோதல் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, கடந்த வௌ்ளக்கிழமை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் 12 பொலிஸார் காயமடைந்தனர்.

காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவ அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் சபாநாயகரின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பாராளுமன்றத்திற்குள் கூரிய ஆயுதத்தைக் கொண்டுசென்றமை தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Sharing is caring!