யானைத் தந்தத்தை வைத்திருந்த மூன்று பேர் கைது

யானைத் தந்தத்தை வைத்திருந்த மூன்று பேர் கண்டி, பொற்கொல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி வலய பொலிஸ் சட்ட அமுலாக்கப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 5030 மில்லி கிராம் நிறையுடைய யானைத் தந்தம் ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பொற்கொல்ல, உகுவெல மற்றும் அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Sharing is caring!