யால சரணாலயம் 2 மாதம் மூடல்

யால தேசிய சரணாலயத்தின் வலயமொன்று 2 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை முதலாம் இலக்க வலயம் மூடப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஏனைய வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்துவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படவுள்ள குறித்த முதலாம் இலக்க வலயம், சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்தளத்தைப் புனரமைப்பு செய்வதற்காகவும் விலங்குகளின் சுதந்திரத்தை கருத்திற்கொண்டும் சரணாலயத்தை 2 மாதங்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!