யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள்

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். அது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.குடா நாட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை(விற்பனை நிலையம்) அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். தற்போது கொடிகாமம் இராமாவில் பகுதியில் அதிநவீன வசதி வாய்ந்த கள்ளு தவறணை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து கைதடி , நுணாவில் பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Sharing is caring!