யாழில் பஸ் சேவையை ஆரம்பிக்க படையினர் இணக்கம்

யாழ்மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் யாழ்.மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

இதன்போது இதில் (B-437) வல்லை -அராலி வீதியின் அச்சுவேலி- வசாவிளான் -தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி அபாயம் இருப்பதால் வீதியின் ஊடான பஸ் போக்குவரத்துக்கு அனுமதிப்பதென படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த வீதி எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பில் அவர்கள் எதனையும் கூறவில்லை.

இதேவேளை பலாலி விமான நிலையத்திற்கு மக்கள் போக்குவரத்திற்கு குறித்த வீதி அவசியம் ஆகும்.

தற்போது அச்சுவேலியில் இருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு வரவேண்டுமாயின் பல கிலோமீற்றர் சுற்றியே மக்கள் பிரயாணம் செய்து வரவேண்டியுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதியை திறந்து விடுமாறு பலதரப்பட்டவர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!