யாழில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை: பிச்சைக்காரன் கைது

யாழ். மானிப்பாயில் பிச்சை எடுக்க வந்தவர்களாலேயே குறித்த பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 35வயதுடைய நபர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை சுமார் 8 மணியளவில் பிச்சைக்காரன் ஒருவர்வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டுள்ளார். அப்போதுஇ அந்த மூதாட்டி 100 ரூபாய் காசுகொடுத்துள்ளார்.

அந்த காசினை வாங்கிக் கொண்டு போன பிச்சைக்காரன் 30நிமிடங்களின் பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று மூதாட்டியை கத்தியால்குத்திக் கொலை செய்துள்ளான்.

பின்னர் வீட்டிலுள்ள மற்றைய வயோதிபப் பெண் மூதாட்டியை வந்து பார்த்த போதுஇ மூதாட்டிகழுத்து அறுக்கப்பட்ட நிலையில்இ இரத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.

பதறிய வயோதி பெண்இ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.அந்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போதுஇ மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சம்பவஇடத்திற்கு வந்து சடலத்தினைப் பார்வையிட்டதுடன்இ சடலத்தினை யாழ்.போதனாவைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்போதுஇ பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போதுஇயாழ்ப்பாணம் ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35வயதுடைய ஜெயனாந்தன் சுதர்சன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் மானிப்பாய்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்இ கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் உள்ளவீட்டில் சி.சி.ரி.வி கெமரா பொருத்தப்பட்டுள்ளது.

அந்த வீட்டின் சி.சி.ரி.விகாணொளிகளைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதிகளைப் பெறும் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முதலாம் இணைப்பு

யாழ். மானிப்பாயில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மானிப்பாய் – சங்கரபிள்ளை வீதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதில் சுமார் 70 வயதுடைய கந்தையா லீலாதேவி என்ற பெண்மணியே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை வீட்டுக்கு வந்தவர்களுடன் சில வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும்இ இதனால் குறித்த பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு கொலைகாரர்கள் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டகாலமாக இருந்து வந்த நிலத்தகராறு கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும்இ குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!