யாழில் வாகனம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வாகனம் ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், அரியாலை – நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மீதே குறித்த தாக்குதல் இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலொன்றே இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல்தாரிகள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் பெட்ரோல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதோடு வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி சென்றுள்ளார்கள்.

இதனால் குறித்த வாகனம் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், வீடும் சிறியளவில் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring!