யாழில் வீட்டிலிருந்த ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ்.கொக்குவில் பகுதியில் வீட்டிலிருந்த ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் அடங்கிய குறித்த குழுவினர், அப்பகுதியில் உள்ள வீடொன்றிக்கு சென்று வீட்டின் உரிமையாளர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றுள்ளனர்.

இதன்போது அவர் அபாய குரல் எழுப்பியவாறு வீட்டினுள் ஓடியுள்ளார். இதனையடுத்து வாள்வெட்டு குழுவினர் பொருட்களை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் அபாய குரலைக்கேட்டு அயலவர்களும், இளைஞர்களும் அவ்விடத்திற்கு விரைந்த போது வாள் வெட்டுக்குழு அங்கிருந்து தப்பிசென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring!