யாழில் வெங்காய அறுவடை ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1500 வரையிலான ஹெக்டெயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள் சின்ன வெங்காய செய்கையில் ஈடுபட்டிருந்தனர்.
காலநிலைக்கு ஏற்றவாறு அதிக விளைச்சலை இம்முறை காலபோகத்தின் போது பெற்றுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கூடுதலான செய்கையாளர்கள் வெங்காய நாற்றுக்களை பயன்படுத்தியே இம்முறை செய்கையில் ஈடுபட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S