யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் கொடூ­ரம் -சம்­பந்­தன் கொதிப்­பு­டன் பதில்

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த ஒரு வாரத்­தில் மூன்று கொடூ­ரச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன. போர் இடம்­பெற்ற காலத்­தி­லும் எமது இனம் பாதிக்­கப்­பட்­டது. போரில்­லாத காலத் தி­லும் எமது இனம் திட்­ட­மிட்டு பாதிக்­கச் செய்­யப்­ப­டு­கின்­றது. இதற்கு நாம் தான் முடிவு கட்­ட­வேண் டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் காட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் 60வய­துப் பெண் ஒரு­வர் கொள்­ளை­யர்­க­ளால் மிகக் கொடூ­ர­மாக வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரது வீட்­டி­லி­ருந்து நகை­க­ளும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் இத்­த­கைய வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கல்வி கலா­சார பண்­பா­டு­க­ளுக்கு யாழ்ப்­பா­ணம் ஒரு காலத்­தில் பெயர்­போ­யி­ருந்­தது. ஆனால் இன்று தலை­கீ­ழாக நிலமை மாறிப்­போய் விட்­டது. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­க­ளின் அட்­ட­கா­சம் ஒரு­பு­றம். போதைப் பொருள் பாவ­னை­யின் உச்­சம் மறு­பு­றம். கொள்­ளை­யர்­க­ளின் அட்­டூ­ழி­யங்­கள் இன்­னொ­ரு­பு­றம். காமு­கர்­க­ளின் கொலை­வெ­றித்­த­னங்­கள் மற்­றொ­ரு­பு­றம் என்று வார்த்­தை­க­ளால் சொல்ல முடி­யாத அள­வுக்கு யாழ்ப்­பா­ணத்­தின் நிலமை வந்­துள்­ளது. இது திட்­ட­மிட்டு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது யாவ­ரும் அறிந்த உண்மை.

Sharing is caring!