யாழ்ப்பாணத்திற்கு படையெடுக்கும் மஹிந்த, கோட்டா அணி!

எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அணி ஒன்று, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலில் மகிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்யவிருப்பதாகவும், அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!