யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், அரசியல் கைதிகளின் பெற்றோரும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

Sharing is caring!