யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய மீனவர்கள்

வட­ம­ராட்சி கிழக்­கில் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­பட்­ட­வர்­கள் வெளி­யேறவேண்­டும் என்று நீதி­மன்று உத்­த­ர­விட்­டுள்ள நிலை­யில் அவர்­கள் முல்­லைத்­தீவு, சாலைப் பிர­தே­சத்­தில் வாடி அமைத்­துக் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது.

கிளி­நொச்சி மாவட்ட நீதி­மன்ற நியா­யா­திக்க எல்­லைக்­குள்,வட­ம­ராட்சி கிழக்­கில் பிர­தேச செய­ல­ரின் அனு­மதி இன்றி அரச காணி­யில் வாடி அமைத்­துக் கட­லட்டை பிடித்­த­வர்­க­ளுக்கு எதி­ராக மரு­தங்­கேணிப் பிர­தேச செய­ல­ரால் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

வழக்கு விசா­ர­ணையை அடுத்து அங்கு நிறு­வப்­பட்­டி­ருந்த கட­லட்­டைத் தொழில் செய்­யும் 8 நிறு­வ­னங்­க­ளும் வெளி­யேறவேண்­டும் என்று கடந்த 25ஆம் திகதி கிளி­நொச்சி மாவட்ட நீதி­மன்று கட்­ட­ளை­யிட்­டது. அதை­ய­டுத்து வாடி­கள் அகற்­றப்­பட்­டன.

மரு­தங்­கேணி, தாளை­யடி போன்ற இடங்­க­ளில் 8 நிறு­வ­னங்­க­ளுக்­குச் சொந்­த­மான 32 வாடி­கள் அகற்­றப்­பட்­டன. சுமார் 850 இற்கு மேற்­பட்ட பிற மாவட்ட மீன­வர்­க­ளும் வெளி­யே­றி­னர்.

அந்த நிறு­வ­னங்­க­ளுக்கு முல்­லைத்­தீவு, சாலைப் பிர­தே­சத்­தி­லும் கட­லட்­டைத் தொழில் செய்­வ­தற்­கான அனு­மதி உண்­டும் என்­றும், அதன் அடிப்­ப­டை­யில் அவர்­கள் அங்கு வாடி­கள் அமைக்­கின்­ற­னர் என்­றும் பிர­தேச மீன­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

சாலை­யில் உள்ள கடற்­ப­டைத் தளத்தை அண்­டிய பகு­தி­க­ளுக்­குள் செல்ல உள்­ளூர் மக்­க­ளுக்கோ, மீன­வர்­க­ளுக்கோ அனு­மதியில்லை. பிற­மா­வட்ட மீன­வர்­கள் மட்­டுமே அந்­தப் பகு­தி­யில் தொழில் செய்­கின்­ற­னர். தற்­போது அதிக மீன­வர்­கள் அந்­தப் பகு­தி­யில் குவி­கின்­ற­னர்.

அவர்­க­ளின் பட­கு­க­ளால் உள்­ளூர் மீன­வர்­க­ளின் வலை­கள் பாதிப்­ப­டை­யும். அவ்­வா­றான பாதிப்­புக்­கள் நடந்­தால் கடற்­படை முகாமை முற்­று­கை­யிட்­டுப் போராட்­டம் நடத்­து­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை என்று உள்­ளூர் மீன­வர்­கள் தெரி­வித்­த­னர்.

Sharing is caring!