“கிளிநொச்சி கிரவல் றோட்டு மண்ணே” ஈழத்து பாடல் வீடியோ

ஈழத்தின் இசை அமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசை /குரல் வடிவில் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் பாடல் ஆசிரியர் நெடுந்தீவு முகிலனின் வரிகளில் வவுனியா ராகஸ்வரம் இசைக்குழுவின் பின்னணி இசையில் இலங்கையின் முன்னணி ஒளிப்பதிவு நிறுவனமான ஸ்டார் மீடியா பிரியந்தனின் ஒளிப்பதிவில் இப்பாடலை வெளியிடுகின்றோம் உறவுகளே எல்லோரும் ஷார் செய்து ஈழ கலைஞர்களின் படைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவீர்கள் என நம்புகின்றோம்

Music& Singing -K.jeyanthan Lyrics -neduntheevu mukilan [email protected] -star media piriyanthan octapad -S.Rathess keyboard – roshan bassguiter -m.bakeerathan produce -vavuniya ragaswaram

கிளிநொச்சி கிறவல் ரோட்டு மண்ணு -அவ நடந்தாலே மண்ணெல்லாம் பொன்னா தெரியுதே..! பரந்தன் சந்தியில் நின்னு -அவ பஸ் ஏறி போனாலே லவ்வு தோணுதே -எனக்கு லவ்வு தோணுதே …! இரணைமடு குளத்திலே குளிச்சதானால் இத்தனை அழகாக இருக்கிறியே ..! முறிகண்டி சாமிய கும்பிட்டதால் என்னத்தான் வளைச்சு நீ போட்டுட்டியே..! சங்குப்பிட்டி பாலம் மேல பறந்தேன் அடியே … ஆனையிறவு உப்பாக உறைஞ்சேன் உயிரே… பூநகரி நெல்லாக விளைஞ்சேன் அழகே… உன்ன பாக்காம அன்னம் தண்ணி மறந்தேன் கிளியே -நான் மறந்தேன் கிளியே …(கிளிநொச்சி ) காவோலை கலரில இருக்கிறியே -நீ பாத்தாக்கா என்நெஞ்சில் கருக்கு வெட்டுதே… அடங்காத குழுமாடா அலைஞ்சேன் நானே -குயிலே உன் குரல் கேட்க்கத்தானே … உடும்பு பிடியத்தானே நானும் பிடிக்க வந்தேன் -புளியம் கொப்பாக தான் நீயும் உடைஞ்சு போன … தட்டாந்தரையாகத்தான் நானும் காஞ்சு போனேன் கரும்பு காடாகத்தான் உன்னால் மாறிப்போனேன். வயல்காட்டு பொம்மைபோல் பேசாம நீ போனா -நான் வாழ மாட்டேனே புலி கோட்டை பேரழகே -என் பேரழகே … (கிளிநொச்சி ) ஆலம் விழுதே உன் கூந்தலடி -அதிலே என் மனசு ஊஞ்சலடி… ஈழ தேசத்தின் நிலவொளி நீ -நான் தேஞ்சு போனேனே உன்னாலடி … அருவி கத்தி போலவளைஞ்ச இடுப்பாலதான் ஆளான தனிமரத்தை சாச்சுப்புட்டா … வாய்க்கால தேடும் மழைத்தண்ணி நானா உன் பின்னால தான் என்ன அலைய விட்டாய். நீ பாக்காம போனாலே என் காதல் என்னாகும் பனம் காட்டு கிளியே என் காந்தள் பூவே -என் காந்தள் பூவே (கிளிநொச்சி )

Sharing is caring!