யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிறுமிக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியான Zee Tamil இல் ஒளிபரப்பாகும்  Sa Re Ga Ma Pa Lil Champs நிகழ்சியில் சஹானா என்ற சிறுமி அபார திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இவருக்கு உலகளாவிய ரீதியில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
கண் பார்வையற்ற சஹானா, பாடல்கள் பாடுவது, இசை கருவிகளை வாசிப்பது என பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இவரின் இசையின் மீது ஈர்ப்பு கொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் அன்பளிப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.
அவருக்கு நன்றி சொல்லும் விதமாக சஹானா பாடல் ஒன்றை பாடி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
அது வைரலாகி பல இலட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

Sharing is caring!