யாழ்ப்பாணம்…பிரபல சர்வதேச வர்த்தக மையம்…எப்போ தெரியுமா?

கிறிஸ்துவிற்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக மையமாக பிரபல்யம் அடைந்திருந்தமை புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் டெரம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபின் கனிங்ஹாம் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக மத்திய கலாசார நிதியம் குறிப்பிட்டது.

குறித்த குழுவினர் யாழ். கோட்டையில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரிஷாந்த குணவர்தன தெரிவித்தார்.

அகழ்வாராய்ச்சிகளின் போது போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலங்களுக்கு உரிய பல தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் பிரிஷாந்த குணவர்தன குறிப்பிட்டார்.

Sharing is caring!