யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

 யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமானது.

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி பத்தாவது தடவையாகவும் இம்முறை இடம்பெறுகின்றது.

வடக்கிற்கான நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபை மைதானத்தில் இக்கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர், யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) வரை இடம்பெறவுள்ளது.

Sharing is caring!