யாழ் பண்ணைக்கடல்…தூண்டில் மீன்பிடிக்கு பிரபலம்
யாழ்ப்பாணத்தையும் தீவுப்பகுதிகளையும் இணைக்கும் பண்ணைப் பாலத்தின் இருமருங்கிலும் தூண்டில் மீன்பிடியாளர்கள் அதிகமாகத் தொழில் செய்து வருகின்றனர்.
பண்ணைப்பாலத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு கடல் நீரோட்டமானது செல்வதால் இங்கு தூண்டில் மீன்பிடியாளர்களுக்கு மீன்கள் பிடிப்பது இலகுவாகவுள்ளது.
ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு 800 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு தூண்டில் மூலம் மீன்பிடிப்பதாகவும் ஒட்டி, ஓரா, களவாய், திரளி மற்றும் அகழி போன்ற மீன்கள் தூண்டில் மூலம் கிடைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்..
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S