யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு புதிய பதவி!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க கடந்த வாரம் நியமிக்கப்பட்ட நிலையில் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் மற்றும் 5 உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில், தமிழ் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு காலப்பகுதியில் பதவி வகித்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிரியல் இராசயனத் துறையின் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார்.இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த பதவிக்காலத்தில் தமிழ் உறுப்பினராக பேராசிரியர் குமாரவடிவேல் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!