யாழ் புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது….சந்தேகத்திற்கிடமான இலத்திரனியல் பொருட்கள் மீட்பு

சந்தேகத்திற்கிடமான ஒரு தொகை இலத்திரனியல் பொருட்களுடன் ஜேர்மன் குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் இன்று காலை யாழ்.புகைரத நிலையத்தில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர்.

அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல் பொருள்ளை இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.

அதனையடுத்து பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனை அடுத்து பெண் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring!