யாழ் மாவட்டத்தில் விசேட சுற்றிவளைப்பில் 30 பேர் கைது

யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 4 மணி முதல் இரவு 08 மணி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sharing is caring!