யுத்தத்தின் பின்னரான நிலை….வெளிப்படுத்திய பொன்சேகா…

யுத்தம் காலத்தில் இராணுவ வீரர்கள் சட்டவிரோத குற்றங்களிலோ , மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படவும் இல்லை. ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னரே ஒருசில சட்டவிரோ குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவ்வாறான குற்றவாளிகள் இருப்பார்களாயின் அவர்கள் மீதான உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பிரச்சினைகளுக்கு உள்நாட்டு நீதிமன்றத்தினூடாசக தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வெவ்வேறு கொள்கைகளையுடைய மக்கள் பிரதிநிதிகள் இருக்கலாம்.

ஆனால் அனைத்து உறப்பினர்களும் கட்சியின் தலைமைத்துவத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு செயற்பட கூடியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Sharing is caring!