அரசியல் இலாபத்திற்காகக் கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து பொறுப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் – ஜனாதிபதி

அரசியல் இலாபத்திற்காகக் கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து, நாடு மற்றும் பிரஜைகள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகக் கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.

குறித்த இந்த நிர்வாகக் கட்டடத்திற்காக 445 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடத்திற்குள் வணிக வங்கி, தபாலகம், வலயக் கல்விப்பணிமனை, கிராமசேவகர் காரியாலயம் உள்ளிட்டவை உள்ளடங்கியுள்ளன.

Sharing is caring!