ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன

வரட்சி காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் நாளை (01) மீண்டும் திறக்கப்படவுள்ளன.

முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பிரயோக விஞ்ஞானம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

இதனைத்தவிர, சமூக விஞ்ஞானம், மனித வளம் ஆகிய பீடங்கள், பரீட்சைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளன.

இதனால், விடுதி வசதிகளைக் கொண்ட மாணவர்கள் இன்று (30) மாலை 4 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக விடுதிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Sharing is caring!