ரஞ்சன் ராமநாயக்க வணக்கு ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம், டிசம்பர் மாதம் 10 ,11 ,12 ஆகிய தினங்களில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிரியசாத் டெப், விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில், ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் அடங்கிய 14 சாட்சியாளர்கள் உள்ளிட்ட சாட்சியங்களின் ஆவணங்களை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றுக்கு சமர்ப்பித்தது.

அத்துடன், சாட்சிகளடங்கிய 4 இறுவெட்டுகளும் 4 பத்திரிகைகளில் வௌியான ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

14 சாட்சியாளர்களில் 6 பேருக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!