ரணிலிடம் கப்பம் வாங்கிய சம்பந்தன்…அபேகுணவர்த்தன

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு அரசாங்கம் ஆடம்பர வீடு மற்றும் சொகுசு வாகனம் ஆகியவற்றை வழங்கியுள்ளதாக நாடாளுன்ற உறுப்பினர் அபேகுணவர்த்தன கூறியுள்ளார்.

இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை வெற்றிக் கொள்வதற்கு என இவ்வாறான வரப்பிரசாதங்களை கூட்டமைப்புக்கு அரசாங்கம் கப்பமாக வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஆடம்பர வீடு, சொகுசு வாகனங்கள் என்பவை அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பிரதான காரணம் என்ன?

கூட்டமைப்பினருக்கு வசதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக் கொள்ளவே இவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் சம்பந்தனும் இன்று எங்களை போன்று நாடாளுமன்ற உறுப்பினரே

இவருக்கு மேலதிக நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்

Sharing is caring!