ரணில் மேல் நாமல் ராஜபக்ச நம்பிக்கை

பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க நாட்டின் இறைமையை உறுதி செய்யும் விதத்தில் செயற்படுவார் என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 49 நாட்களாக நீடித்து வந்த அரசியல் ஸ்திரமற்ற நிலை நேற்று ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்தைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து ரணிலுக்கு எதிராக பிரசாரம் செய்துவந்த நாமல் ராஜபக்ச, சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது twitter தளத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார்.

குறித்த twitter பதிவில் அவர் “அரசியல் மோதல்கள் இருந்தாலும் அதற்கு அப்பால் சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன். தற்போதாவது ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இறைமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கின்றேன். மேற்குலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பார் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!