ரணில் மைத்திரி கலந்துரையாடல் நிறைவு

அரசாங்கத்தின் எதிர்கால திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றிரவு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் |ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

09.30PM – ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் கலந்துரையாடல்

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை சந்தித்ததன் பின்னர் பிரதமர் இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

Sharing is caring!