ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவது தமது நோக்கமல்ல – மக்கள் விடுதலை முன்னணி

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவது தமது நோக்கமல்ல என்றும் பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்தாலும் ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் அதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி நடந்த சூழ்ச்சிக்கு எதிராகவே நாம் செயற்படுகின்றோம். தற்போதைய எமது செயற்பாடுகள் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்பதாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (12) இடம்பெற்ற  ரணில் விக்கிரமசிங்க மீதான  நம்பிக்கைப் பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போது அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனைக் கூறினார்.

ஒக்டோபர் 26 இல் இடம்பெற்ற சூழ்ச்சியின் போது மக்கள் இருந்த மனநிலை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அது சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் முரணான செயற்பாடு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சட்டத்திற்கு முரணாக சதி மூலம் ஆட்சியமைத்ததையே நாம் எதிர்க்கிறோம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Sharing is caring!