ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைதியாகியுள்ளார்

ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

உடுகம்பொலயில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மினுவாங்கொடை தொகுதிக்கூட்டத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நெருக்கடி நிலை தொடர்பில் கருத்துக் கூறிய அவர், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவும், தெவரப்பெருமவும் முரண்பட்டுக்கொண்டனர். நிதி அமைச்சுக்கு வடிவமைப்பாளர் அவசியமில்லை என ரவி கருணாநாயக்க கூறுகிறார். ரவிக்கும் மங்களவிற்கும் இடையில் மோதல் காணப்படுகின்றது. யார் எதனைக் கூறினாலும் தலைமைத்துவம் தொடர்பில் பாரிய பிரச்சினை நிலவுகின்றது. இன்று ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைதியாகியுள்ளார்

என பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

Sharing is caring!