ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி, 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

புவக்பிட்டிய பகுதியில் இன்று (18) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானைகள் மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ளது.

இதனால், மட்டக்களப்பு வரையான ரயில் மார்க்கத்தின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!