ரயில்வே கட்டணங்களை அதிகரிப்பதற்கான திருத்தங்கள்
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ரயில்வே கட்டணங்களை அதிகரிப்பதற்கான திருத்தங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, ரயில்வே கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
ரயில் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், 10 ரூபா ஆரம்பக் கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என ரயில்வே திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இத்திபாலகே குறிப்பிட்டார்.
எனினும், ஆரம்பக் கட்டணத்திற்கான தூரம் 9 கிலோமீட்டரிலிருந்து 07 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து ஹூனுபிட்டிய வரை இதுவரைக்காலம் 10 ரூபாவாகக் காணப்பட்ட ரணில் கட்டணம் புதிய திருத்தத்திற்கு அமைய 15 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான கட்டணம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளைக்கான கட்டணம் 70 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கட்டண திருத்தம் இதுவென ரயில்வே திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இத்திபாலகே சுட்டிக்காட்டினார்.