ரயில்வே திணைக்களத்தில் 6,000 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள்

ரயில்வே திணைக்களத்தில் 6,000 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன.

திணைக்களத்தின் சேவைகளை சீராக மேற்கொள்வதற்கு 20,000 ஊழியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், 14,000 ஊழியர்களே பணிபுரிவதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ரயில் மார்க்க பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் ரயில் நிலையங்களின் பராமரிப்பு நடவக்கைகளுக்குமே ஊழியர் பற்றாக்குறை அதிகம் நிலவுகின்றமை தெரியவந்துள்ளது.

இதனால், வடக்கு ரயில் மார்க்கம் மற்றும் மலையக ரயில் மார்க்கத்திற்கான பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு போதியளவு ஊழியர்களை ஈடுபடுத்த முடியாதுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Sharing is caring!