ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன

ரயில் கட்டணங்கள் நாளை (01)  முதல் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாவாக காணப்படுவதுடன், இரண்டாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணமான 40 ரூபாவிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில் பருவச்சீட்டு கட்டணமும் திருத்தப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு பின்னரே ரயில் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!