ராஜபக்ஷாக்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது

ராஜபக்ஷாக்கள் என்பவர்கள் ஒன்றாக இணைந்து பயணிப்பவர்கள் எனவும், அவர்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்துக்கு கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வருகை தந்திருந்தார். அரசியலில் கட்சி நடவடிக்கை இன்றுடன் ஆரம்பிக்குமா? என கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இதனைக் கூறினார்.

கட்சியில் இடம்பெறும் அரசியல் நடவடிக்கையில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காகவே சமூகமளித்தேன். தான் அரசியலில் ஈடுபட்டுத்தான் வருகின்றேன். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Sharing is caring!