ருவன் விஜேவர்த்தன ஊடக அமைச்சராக பதவியேற்பு

அமைச்சரவை அந்தஸ்தற்ற வெகுசன ஊடக அமைச்சராக ருவன் விஜேவர்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ருவன் விஜேவர்தன இதற்கு முன்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மங்கள சமரவீர நிதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக, மங்கள சமரவீர வசம் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கள் இருந்த நிலையில், தற்போது அவர் நிதி அமைச்சராக மாத்திரம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!