ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் டொலர் கடனை திருப்பிச்செலுத்த அதிக பணம் செலுத்த வேண்டும்

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக எரிபொருள் இறக்குமதிக்காக பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்தும்போது, கனியவள கூட்டுத்தாபனத்துக்கு பதினேழரை மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

கனிய வள கூட்டுத்தாபனம் 2 அரச வங்கிகளிடம் எரிபொருள் இறக்குமதியின் பொருட்டு 2.5 பில்லியன் டொலரை கடனாக பெற்றுள்ளதாக கனிய வள அபிவிருத்தி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் டொலர் கடனை திருப்பிச்செலுத்துவதற்காக இவ்வாறு அதிக பணம் செலவிடப்பட நேரிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!