ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுப்படுதற்கு ஏற்றுமதித் துறையை மேம்படுத்தல் தொடர்பாக கவனம்

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைத் தடுப்பது மற்றும் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய தேசிய பொருளாதாரசபை கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

அரச மற்றும் தனியார் துறையினர், பல்கலைக்கலக உபவேந்தர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பொருளாதாரசபை கூடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலை குறித்து புத்திஜீவிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு நாட்டிற்கு வௌியில் ஏற்படும் சில காரணிகளே காரணமாக அமைந்துள்ளதாகவும் இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மத்தியவங்கியின் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதற்கு காணப்படும் சாதகமான காரணிகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!